வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வலென்சியாவிற்கு விஜயம் செய்த ஸ்பெயின் மன்னர் மீது தாக்குதல்
வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வலென்சியா பகுதிக்கு ஸ்பெயினின் மன்னர் ஆறாம் ஃபெலிப்பே வருகை தந்தபோது எதிர்ப்பாளர்கள் அவர்கள் மீது சேற்றை வீசி கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
“கொலைகாரன்” மற்றும் “அவமானம்” என்று கோபமான எதிர்ப்பாளர்கள் ராஜாவை நோக்கி கூச்சலிட்டுள்ளனர்.
பல தசாப்தங்களில் ஸ்பெயினின் மிக மோசமான வெள்ளம் முழு சுற்றுப்புறங்களையும் சேற்றில் மூடியது.
வெள்ளத்தில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். உயிர் பிழைத்தவர்களை கண்டுபிடித்து உடல்களை மீட்கும் நம்பிக்கையில் அவசரகால பணியாளர்கள் நிலத்தடி கார் நிறுத்துமிடங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் வழியாக தொடர்ந்து சோதனைய செய்து வருகின்றனர்.
ராஜா பெலிப்பே மற்றும் ராணி லெடிசியா ஆகியோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பைபோர்டா நகரத்திற்கு வருகை தந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.