கனடாவில் யூத பாடசாலைகள் மீது தாக்குதல் ; கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் ட்ரூடோ
கனடாவின் மொன்ரியோலில் உள்ள யூத பாடசாலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு, வன்முறை என்றைக்குமே தீர்வாகாது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையே நடந்து வரும் மோதல்களைத் தொடர்ந்து, பல நாடுகளில் யூதர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கனடாவில், யூத தேவாலயங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. அத்துடன், கனடாவில், இஸ்லாமியர்களுக்கெதிரான வெறுப்பும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கனடாவில் மொன்ரியோலில் உள்ள யூத பாடசாலைகள் மீது நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக எந்த சேதமும் இன்றி அனைவரும் உயிர் தப்பினர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். கனடா மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். யாரும் யாரிடமும் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார்.