செய்தி மத்திய கிழக்கு

தாக்குதல் தீவிரம் – காஸா சிட்டியை விட்டு வெளியேறிய 250,000 பேர்

தாக்குதல் தீவிரமடைந்த நிலையில் காஸா சிட்டியை விட்டு சுமார் 250,000 பேர் வேறு இடங்களுக்கு வெளியேறிவிட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

காஸா சிட்டி மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து அவ்வாறு நடந்திருப்பதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

காஸா வட்டாரத்தின் மிகப்பெரிய நகரான காஸா சிட்டியிலும் அதை சுற்றியுள்ள பகுதியிலும் சுமார் 1 மில்லியன் பாலஸ்தீனர்கள் வசிப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் மதிப்பிடுகிறது.

காஸாவின் குடிமை பாதுகாப்பு பிரிவு தொடர் விமான தாக்குதல்களைப் பற்றி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மேற்குப் பகுதியைவிட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!