ஜெர்மனியில் நடந்த தாக்குதல் சம்பவம் : புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் கைது!

ஜெர்மனியில் முனிச்சில் நடந்த “சந்தேகத்திற்குரிய தாக்குதலில் குழந்தைகள் உள்பட குறைந்தது 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் 24 வயதான ஆப்கானிஸ்தான் நாட்டைச்சேர்ந்த ஃபர்ஹாத் என்ற புகலிடக் கோரிக்கையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் ஒரு தெருவில் நடந்து சென்றபோது, அந்த குழுவுடன் வந்த ஒரு போலீஸ் வாகனத்தை கார் முந்திச் சென்றதாக ஜெர்மன் நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர் கார் வேகமாகச் சென்று குழுவின் பின்புறத்தில் மோதியதாகவும், பின்னர் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பவேரியா மாநில பிரதமர் மார்கஸ் சோடர், இந்த சம்பவம் “தாக்குதல் என்று சந்தேகிக்கப்படுகிறது” என்று கூறினார். தாக்குதல்தாரியின் நோக்கம் குறித்து தெரியவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.