நான்காம் நாள் முடிவில் 3விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்றுள்ள இந்தியா
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 3-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து 296 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது.
இதனையடுத்து நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் லபுசேன் 41 ரன்னில் அவுட்டானார். கேமரூன் கிரீன் 25 ரன்னில் போல்டானார். மிட்செல் ஸ்டார்க் 41 ரன்னில் அவுட்டானார்.
அலெக்ஸ் கேரி பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். இறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 270 ரன்களை எடுத்து 443 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் பவுண்டரிகளாக விளாசினர்.
சுப்மன் கில் 18 ரன்கள் இருந்த போது அவுட் ஆனார். அடுத்து வந்த புஜாரா சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ரோகித் சர்மா 43 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
அவர் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே புஜாரா 27 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரகானே – விராட் கோலி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அவ்வப்போது பவுண்டரிகளை பறக்க விட்ட இந்த ஜோடி பாட்னர்ஷிப்பில் 50 ரன்களை கடந்தது.
இந்திய அணி 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாளான நாளை இந்திய அணிக்கு 280 ரன்கள் தேவை.
விராட் கோலி 44 ரன்னிலும் ரகானே 20 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளது.