76 வயதான நடிகர் அர்னால்டுக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை… வெளியான புகைப்படம்!
நடிகர் அர்னால்டுக்கு 76 வயதில் இதயப்பிரச்சினை வந்துள்ளது. இதனால், இவருக்கு பேஸ் மேக்கர் வைத்து சிகிச்சை செய்திருக்கிறார். இதன் பிறகு தான் நலமுடன் இருப்பதாக அர்னால்டு வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்திருக்கிறது.
அமெரிக்காவில் புகழ் பெற்ற பாடி பில்டராக இருந்து வந்த அர்னால்டு 1970இல் வெளியான ’ஹெர்குலஸ் இன் நியூயார்க்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பினனர் 1984இல் வெளியான சயின்ஸ் பிக்ஷன் ஆக்ஷன் திரைப்படமான ’தி டெர்மினேட்டர்’ மூலம் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்தார். ஹாலிவுட் தாண்டி பல இளைஞர்களின் ஆக்ஷன் ஆதர்ச நாயகனாக உருவெடுத்த அர்னால்டுக்கு இப்போது 76 வயதாகிறது. அவருக்கு இதயப்பிரச்சினை காரணமாக பேஸ் மேக்கர் சிகிச்சை நடந்திருக்கிறது என்ற விஷயம் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சிகிச்சைக்குப் பிறகு தான் நலமுடன் இருப்பதை உறுதி செய்துள்ள அர்னால்டு, புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ’அறுவை சிகிச்சையால் ‘ஃபுயூபர் சீசன்2’ வராது என்று சொன்னார்கள். நிச்சயம் இல்லை. சிறிது ஓய்வுக்குப் பின் ஏப்ரலில் இருந்து படப்பிடிப்புக்குக் கிளம்பி விடுவேன்’ என்று கூறியுள்ளார்.
ஃபிட்னஸ் மற்றும் விளையாட்டு கவுன்சில் தலைவராக 1990 முதல் இருந்து வந்த அர்னால்டு, அரசயலில் நுழைந்து கலிபோர்னியா மாகாணத்தின் 38வது கவர்னராக 2003இல் தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்காவில் இரண்டு முறை ஒருவர் கவர்னராக பதவி வகிக்கலாம் என்ற விதி இருக்க, அவ்வாறு பதவி வகித்த அர்னால்டு 2011இல் மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்தார். தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.