ஆப்பிரிக்கா

சூடானை உலுக்கிய பயங்கரம் – ஒரே புதைகுழியில் 87பேரின் சடலங்கள்

ஆபிரிக்க நாடான சூடானில் ஒரே புதை குழியில் இருந்து 87 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி சூடானில் இராணுவத்தினருக்கும், பி.எஸ்.எப். எனப்படும் துணை இராணுவ படையினருக்கும் இடையே இடம்பெற்றுவரும் மோதலானது தீவிரம் அடைந்தது.

இந்த உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் சூடானின் மேற்கு பகுதியான டார்பூரில் அண்மையில் 87 பேரின் உடல்கள் ஒரே புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளமை உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதனை வெகுஜன படுகொலை எனத் தெரிவித்துள்ள ஐ.நா. சபை இது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு