பாகிஸ்தானின் 14 ஆவது அதிபராக ஆசிப் அலி சர்தாரி தெரிவு!

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தானின் 14வது அதிபராக இன்று (09.03) இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
68 வயதான சர்தாரி, பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) ஆகியவற்றின் கூட்டு வேட்பாளராக தேர்தலில் களமிறங்கினார்.
இந்த தேர்தலில் மொத்தமாக 255 வாக்குகளை அவர் பெற்றுக்கொண்டார்.
அரசியலமைப்பின் விதிகளின்படி, தேசிய சட்டமன்றம் மற்றும் நான்கு மாகாண சபைகளின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் தேர்தல் கல்லூரியால் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
(Visited 14 times, 1 visits today)