இலங்கை

ஆசிய விளையாட்டு போட்டி : வீரர்கள் அனைவரும் இலங்கை திரும்பினர்!

சீனாவின் Hangzhou நகரில் நடைபெற்ற 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற வெற்றியாளர் அணியினர் நேற்று (10.10) இரவு இலங்கை வந்தடைந்தனர்.

தங்கப் பதக்கத்தையும் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று நாட்டிற்கு வருகை தந்த  தருஷி கருணாரத்ன அதிக கவனத்தைப் பெற்றார்.

21 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்காக தங்கப் பதக்கத்தை வென்று தந்தவர் என்ற பெருமையை தருஷி கருணாரத்ன பெற்றுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய தருஷி கருணாரத்ன 2:03.20 நிமிடங்களில் போட்டியை நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

தற்போது ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் அவர் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!