AsiaCup M08 – 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய 2ஆவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஹாங்காங் அணிகள் மோதின. டாஸ் வன்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஹாங்காங் அணியின் ஜீஷன் அலி, அன்ஷி ராத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜீஷன் அலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, ராத் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஜீஷன் அலி 17 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாபர் ஹயாத் 4 ரன்னில் வெளியேறினார்.
3ஆவது விக்கெட்டுக்கு அன்ஷி ராத் உடன் நிசாகத் கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அன்ஷி ராத் 46 பந்தில் 48 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
இறுதியாக ஹாங்காய் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் அடித்துள்ளது.
150 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பதும் நிஷாங்கா அதிரடியாக விளையாடி அரைசதமடித்தார்.
இறுதியில் இலங்கை அணி 18.5 ஓவர்களில் இலக்கை கடந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.