AsiaCup M07 – ஓமன் அணியை வீழ்த்திய ஐக்கிய அரபு அமீரகம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம்- ஓமன் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர்களான அலிஷன் ஷரபு- கேப்டன் முகமது வாசீம் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
வாசீம் 54 பந்தில் 69 ரன்கள் விளாசினார். முகமது சோகைப் 13 பந்தில் 21 ரன்களும், ஹரிஷித் கவுசிக் ஆட்டமிழக்காமல் 8 பந்தில் 19 ரன்களும் விளாசினர்.
பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் 10 பந்தில் 20 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
ஆர்யன் பிஷ்ட் 32 பந்தில் 24 ரன்களும், வினாயக சுக்லா 17 பந்தில் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஓமன் 18.4 ஓவரில் 130 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஐக்கிய அரபு அமீரகம் 42 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐக்கிய அரபு அமீரகம் இரண்டு போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. ஓமன் இரண்டு போட்டிகளிலும் விளையாடி இரண்டிலும் தோல்வியடைந்துள்ளது. இதனால் ஓமன் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.