AsiaCup M02 – UAE அணியை இலகுவாக வீழ்த்திய இந்திய அணி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி 13.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 57 ரன்னில் சுருண்டது. குல்தீப் யாதவ் ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 58 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
3ஆவது ஓவரில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 16 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 30 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில் இந்தியா 4.3 ஓவரில் 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சுப்மன் கில் 9 பந்தில் 20 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 2 பந்தில் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.