AsiaCup – தொடரில் இரண்டாவது முறையும் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
சூப்பர் 4 சுற்றின் 2வது போட்டி துபாயில் நடந்து முடிந்தது. இதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச தீர்மானித்தது
தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சாஹிப்சாதா பர்ஹான் 58 ஓட்டங்கள் எடுத்தார்.
இதையடுத்து 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது. இந்தியாவின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினர்.
இந்த இணை பாகிஸ்தானின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. இதில் அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா அரைசதம் அடித்து அசத்தினார்.
தொடர்ந்து திலக் வர்மா அதிரடியாக விளையாடி அணிக்காக 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இறுதியில் இந்திய அணி 18.5 ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.