விளையாட்டு

Asia Cup – இந்தியா அணி வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா, இலங்கை அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா 49.1 ஓவரில் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

கேப்டன் ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி அரை சதம் விளாசினார். அவர் 53 ரன்னில் வெளியேறினார்.

கே.எல்.ராகுல் 39 ரன்னும், இஷான் கிஷன் 33 ரன்னும், அக்சர் படேல் 26 ரன்னும் எடுத்தனர்.

இலங்கை சார்பில் துனித் வெல்லாலகே 5 விக்கெட்டும், சரித் அசலங்கா 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் முதலில் துல்லியமாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனால் இலங்கை அணி 99 ரன்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 7வது விக்கெட்டுக்கு இணைந்த தனஞ்செய டி சில்வா, துனித் வெல்லாலகே ஜோடி 63 ரன்களை சேர்த்தது.

டி சில்வா 41 ரன்னில் அவுட்டானார். கடைசி வரை போராடிய வெல்லாலகே 42 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில், இலங்கை 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் குல்தீப் யாதவ்ப் 4 விக்கெட்டும், பும்ரா, ஜடேஜா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

(Visited 13 times, 1 visits today)

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ