ஆஷஸ் தொடர் – நான்காவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், கடந்த வாரம் அடிலெய்ட்(Adelaide) மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், மெல்போர்ன்(Melbourne) மைதானத்தில் நடைபெறவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இரண்டு மாற்றங்களுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ்(Pat Cummins) மற்றும் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன்(Nathan Lyon) காயம் காரணமாக கடைசி இரு டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளனர்.
இவர்களுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்சன்(Jhye Richardson) மற்றும் சுழற்பந்து வீச்சாளர் டாட் மர்பி(Todd Murphy) அணியில் இடம்பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி விபரம் –
ஸ்டீவ் ஸ்மித்(Steve Smith)
ஸ்காட் போலண்ட்(Scott Boland)
அலெக்ஸ் கேரி(Alex Carey)
பிரெண்டன் டாகெட்(Brendan Doggett)
கேமரூன் கிரீன்(Cameron Green)
டிராவிஸ் ஹெட்(Travis Head)
ஜோஷ் இங்கிலிஸ்(Josh Inglis)
உஸ்மான் கவாஜா(Usman Khawaja)
மார்னஸ் லெபுசென்(Marnus Labuschagne)
டாட் மர்பி(Todd Murphy)
மைக்கேல் நெசர்(Michael Neser)
ஜெய் ரிச்சர்ட்சன்(Jhye Richardson)
மிட்செல் ஸ்டார்க்(Mitchell Starc)
ஜேக் வெதரால்ட்(Jake Weatherald)
பியூ வெப்ஸ்டர்(Beau Webster)





