தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில் தைவான் ஜலசந்தியைில் மீளவும் பதற்றம்!
தைவான் அதிபர் தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கின்ற நிலையில் நேற்று (07.12) தைவான் ஜலசந்தி அருகில் சீனாவின் காலநிலை பலூன் பறந்ததாக தைவான் இன்று (08.12) அறிவித்துள்ளது.
தைவான் பாதுகாப்பு அமைச்சர் சியு குவோ-செங் நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எங்கள் ஆரம்ப புரிதல் என்னவென்றால், அது ஒலிக்கும் பலூன் ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், சீன அரசாங்கத்திற்கு சாதகமான முடிவுகளை நோக்கி தனது தேர்தல்களை திசைதிருப்ப இராணுவ அல்லது பொருளாதார அழுத்தத்தை பிரயோகிக்க பெய்ஜிங் முயல்வதாக தைவான் குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் தைவானுக்கு எதிரான தனது இராணுவ அழுத்தத்தை சீனா முடுக்கிவிட்டுள்ளது, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தீவைச் சுற்றி இரு முறை போர் பதற்றங்கள் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.