Site icon Tamil News

உலகிற்கு ஆபத்தாகும் செயற்கை நுண்றிவு – வேலை பறிப்போகும் அபாயத்தில் கோடி கணக்கானோர்

உலகிற்கு ஆபத்தாகும் செயற்கை நுண்றிவினால் கோடி கணக்கானோர் பாதிக்கப்படவுள்ளனர்.

செயற்கை நுண்றிவு தொழில் நுட்பத்தினால் வேலை வாய்ப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி உலக பொருளாதார மன்றம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வேலை வாய்ப்புகளின் எதிர்காலம் என்ற தலைப்பில் சுவிட்சர்லாந்தின் கால்ஜினி நகரை தலைமையகமாக கொண்ட உலகப் பொருளாதார மன்றம் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் உலக அளவில் உள்ள மொத்த வேலை வாய்ப்புகளில் 23 சதவீதம் வரை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினால் பாதிப்படையும் என்று இதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்தாண்டுகளில் உலகெங்கும் ஒரு கோடியே 40 லட்சம் பணி இழப்புகள் ஏற்படும் என்கிறது. 8 கோடியே 30 லட்சம் வேலைகள் இல்லாமல் ஆகிவிடும் என்றும், 6 கோடியே 90 லட்சம் புதிய வேலைகள் மட்டும் உருவாகும் என்று கூறியுள்ளது.

இதற்கு செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, பருவ நிலை மாற்றம் ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அலுவலக நிர்வாகம், பாதுகாப்பு பணி, தொழிற்சாலை மற்றும் விற்பனையக பணிகளுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version