இலங்கையில் அரச சேவையில் செயற்கை நுண்ணறிவுப் புரட்சி – ஜனாதிபதியின் புதிய பயிற்சித் திட்டம்
அரச உத்தியோகத்தர் மத்தியில் செயற்கை நுண்ணறிவை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஜனாதிபதி செயலகமும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சும் இணைந்து அமுலாக்கும் “AI for Transforming Public Services” என்ற பயிற்சி நெறி சமீபத்தில் வட மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தல் ஊடாக அரச துறையில் நவீனங்களைப் புகுத்தி மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல், பொது மக்கள் சேவையைச் செயற்றிறன் வாய்ந்தவையாக மாற்றுதல், வெளிநாட்டுப் பயிற்சி வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுத்தல், டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கைகளுக்காகத் தயார்படுத்துதல் போன்றவை பயிற்சித் திட்டத்தின் சில நோக்கங்களாகும்.
அரச உத்தியோகத்தர்கள் மத்தியில் செயற்கை நுண்ணறிவு பற்றி எழுத்தறிவை மேம்படுத்தி, வளர்ச்சி காணும் உலகிற்குப் பொருத்தமான உத்தியோகத்தர்களை உருவாக்குதல் என்ற பிரதான நோக்கமும் உள்ளது.
டிஜிட்டல் பொருளாதாரம் பற்றி ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய பிரதான உரையை நிகழ்த்தினார்.





