செயற்கை நுண்ணறிவு ஒரு பொற்காலத்தின் துவக்கம் அல்ல – தொழில்நுட்ப வல்லுநர் எச்சரிக்கை

மனிதகுலத்திற்கு AI ஒரு பொற்காலத்தை ஏற்படுத்தும் என பலர் நம்பினாலும், Google X நிறுவனத்தின் முன்னாள் தலைமை வணிக அதிகாரி மோ கவ்டட் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்.
AI வேலைகளை உருவாக்கும் என்ற எண்ணம் தவறானது. எதிர்பார்த்ததைவிட வேகமாகவே அது வேலை இழப்பை ஏற்படுத்தும், என்றார்.
அடுத்த 5 முதல் 15 ஆண்டுகளில், ஏராளமானோர் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும் என்றும், திறமையான சிலர் மட்டும் தற்காலிகமாகவே தங்கள் பணிகளைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்றும் கவ்டட் எச்சரிக்கிறார்.
AIகள் நிறைவேற்று அதிகாரிகளை கூட மாற்ற பயன்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
AI ஒரு மோசமான விஷயம் அல்ல. ஆனால் லாபத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் நிறைவேற்று அதிகாரிகள், AI யை பயன்படுத்தி ஊழியர்களை பணிநீக்கம் செய்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
மிக அருகிய காலத்திலேயே உலகத் தலைவர்களே கூட AI மூலம் மாற்றப்படக்கூடும் என்றும் மோ கவ்டட் சுட்டிக்காட்டுகிறார்.