உக்ரைனுக்காக தயாராகும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ட்ரோன்கள் – நெருக்கடியில் புட்டின்

ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட ட்ரோன்கள் தயாராகி வருகின்றது.
செக் குடியரசில் அமைந்துள்ள LPP நிறுவனம், இதனை தயாரித்து வழங்கி வருகிறது.
இந்த ட்ரோன்கள், நிலப்பரப்பு வரைபடங்களுடன் ஒப்பிட்டு இலக்குகளை துல்லியமாகக் கணிக்கவும் தாக்கவும் கமராக்கள் மற்றும் சென்சார்கள் மூலம் செயல்படுகின்றன.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், இந்த ட்ரோன்கள் இலக்கை தானாக அடையாளம் காணும் திறனையும் வழங்குகிறது.
LPP நிறுவனம் இதுவரை நூற்றுக்கணக்கான ட்ரோன்களை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது.
மேலும் பல ட்ரோன்கள் அனுப்பத் தயாராக உள்ளதாகவும், உக்ரைனுக்கான தனது ஆதரவை தொடர்ந்து வழங்க இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
(Visited 7 times, 7 visits today)