ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்ய உத்தரவு

தென்கொரிய அதிபராக செயல்பட்டு வந்தவர் யூன் சுக் இயோல். இவர் கடந்த டிசம்பர் மாதம் நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இந்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவசர நிலை உத்தரவை அதிபர் திரும்பப்பெற்றார்.

இதையடுத்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நாட்டில் அவரச நிலையை பிரகடனப்படுத்தி கிளர்ச்சிக்கு நிகரான குற்ற செயலில் ஈடுபட்டதாக கடந்த மார்ச் மாதம் யூன் சுக் இயோல் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து அதிபர் சுக் இயோலை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தன. வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் அதிபர் பதவியில் இருந்து யூன் சுக் இயோல் நீக்கப்பட்டார். புதிய அதிபராக லீ ஜே-மியுங் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தது தொடர்பான வழக்கில் சாட்சிகளை அழிக்க முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் முயற்சிப்பதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலை கைது செய்ய அரசுக்கு கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. .

இதையடுத்து, யூன் சுக் இயோல் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 8 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி