இந்து துறவியின் கைது அநியாயமானது – வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா
பங்களாதேஷில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா, தனது நாட்டில் இந்து துறவி கைது செய்யப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
துறவி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதல்களின் போது கொல்லப்பட்ட வழக்கறிஞர் ஒருவரின் மரணம் குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.
“சனாதன மத சமூகத்தின் உயர்மட்ட தலைவர் ஒருவர் அநியாயமாக கைது செய்யப்பட்டுள்ளார், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
“அனைத்து சமூகத்தினரின் மத சுதந்திரம் மற்றும் வாழ்க்கை மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் பொருளாதாரம் மற்றும் சட்டம் ஒழுங்கைக் கையாளும் திறன் குறித்த தீவிர கவலைகளை எடுத்துரைத்த ஹசீனா, “தற்போதைய அதிகாரத்தை பறிப்பவர்கள் அனைத்துத் துறைகளிலும் தோல்வியைக் காட்டி வருகின்றனர்.
அன்றாடத் தேவைகளின் விலைகளைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டனர், மக்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பை வழங்கத் தவறிவிட்டனர். சாமானியர்கள் மீதான இந்த சித்திரவதைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன் என குறிப்பிட்டார்.
சிட்டகாங்கில் ஒரு வழக்கறிஞரின் மரணத்திற்கு வழிவகுத்த வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்காக வங்காளதேசத்தில் இடைக்கால அரசாங்கத்தை ஹசீனா கடுமையாக சாடினார்.
இடைக்கால அரசாங்கம் பயங்கரவாதிகளை தண்டிக்க தவறினால், “மொத்த மனித உரிமை மீறல்” தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.