டெல்லியில் உணவு விஷத்தால் சுமார் 200 பேர் மருத்துவமனையில் அனுமதி

வடமேற்கு டெல்லியில் நவராத்திரி விரதத்தின் போது பக்வீட் மாவு கொண்டு தயாரிக்கப்படும் உணவை சாப்பிட்ட கிட்டத்தட்ட 200 பேர் நோய்வாய்ப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜஹாங்கிர்புரி, மகேந்திர பார்க், சமய்பூர், பால்ஸ்வா டெய்ரி, லால் பாக் மற்றும் ஸ்வரூப் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாபு ஜகஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஜஹாங்கிர்புரி காவல் நிலையத்திற்கு ‘குட்டு அட்டா’ (பக்வீட் மாவு) கொண்டு தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்ட பிறகு பலர் நோய்வாய்ப்பட்டதாகத் தகவல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 3 times, 1 visits today)