மடகாஸ்கரின் புதிய பிரதமராக இராணுவ ஜெனரல் ரூபின் போர்டுனட் சஃபிசம்போ (Ruphin Fortunat Zafisambo) நியமனம்
மின்வெட்டு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் தூண்டப்பட்ட தொடர்ச்சியான போராட்டங்களுக்கு மத்தியில் மடகாஸ்கரின் புதிய பிரதமராக இராணுவ ஜெனரல் ரூபின் ஃபோர்டுனட் சஃபிசம்போ (Ruphin Fortunat Zafisambo) நியமிக்கப்பட்டுள்ளார்.
போராட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக மடகாஸ்கர் ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா கடந்த திங்கட்கிழமை அரசாங்கத்தை கலைப்பதாக அறிவித்து ஒரே வாரத்தில் புதிய பிரதமரை நியமித்துள்ளார்.
தற்போது மூன்று வாரங்களாக தொடரும் இந்த போராட்டத்தில் இதுவரை 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.





