காலில் கருப்பு கயிறு கட்டுபவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு இது
தற்போதைய பெண்கள் மத்தியில் காலில் கருப்பு கயிறு கட்டுவது அதிகரித்து வருகிறது. வெறும் கயிறு மட்டும் அல்லாமல், அத்துடன் கிரிஸ்டல் அல்லது யானை, இதயம், வட்டம். முத்து என சில லாக்கெட்டுகளையும் இணைத்து போடுவார்கள். இது தற்போதைய இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வந்தாலும் பழங்காலத்தில் இருந்தே நமது முன்னோர்களால் பின்பற்றப்படும் சில விஷயங்களில் ஒன்று.
நமது பாட்டி தாத்தாக்கள் யாருக்காவது உடல் நிலை சரியில்லாமல் மருத்துவ மனையில் இருந்து வந்தாலோ, அல்லது விபத்துக்கள் ஏற்பட்டாலோ கருப்பு கயிறு அல்லது தலை முடியினால் செய்யப்பட்ட உருவாக்கப்பட்ட கயிறை கட்டுவார்கள். ஏனென்றால், அது கண் திருஷ்டியை நீக்கிவிடும் என்பது ஐதீகம். ஜோதிடத்தின்படி, காலில் கருப்பு கயிறு கட்டுவதால் நமக்கு பல நன்மைகள் கிடைப்பதாக கூறப்படுகிறது. அதே போல எந்த ராசிக்காரர்கள் காலில் கருப்பு கயிறு கட்டலாம்… யார் கட்டக்கூடாது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி பார்வைக்கு சக்தி உண்டு என கூறப்படுகிறது. சிலருக்கு கண்பட்டால் கெட்டது நடக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு. தீய கண்கள் அவர்கள் மீது படாமல் இருக்க, அவர்கள் கன்னத்தில் கருப்பு புள்ளி அல்லது காலில் கருப்பு கயிறு கட்டுவோம். உத்தரபிரதேசத்தில் உள்ள பாபா பைரவநாதர் கோவிலில் இருந்து இந்த கயிறு கட்டும் கலாச்சாரம் தொடங்கியதாக கூறப்படுகிறது. சிலருக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போனால் அவர்களுக்கு காலில் முடியால் ஆன கருப்பு கயிறு கட்டுவார்கள். காலில் மட்டும் அல்ல, கை, கழுத்து அல்லது இடிப்பில் கூட கருப்பு கயிறு அணிவதுண்டு. இதனால், கண் திருஷ்டி நீங்கும் என்பது ஐதீகம்.
கருப்பு நிறத்திற்கு தீமையை விரட்டும் சக்தி உடையது என நம்பப்படுகிறது. அதே போல தீய சக்திகள் இருளில் இருப்பதாக நம்பப்படுகிறது. அது மட்டும் அல்ல, சனி பகவான் முதலில் ஒருவரின் கால்களை தான் பற்றுவார் எனவும் கூறப்படுகிறது. எனவே, காலில் கருப்பு கயிறு கட்டுவதன் மூலம், சனி தோஷம் நீங்கும். அத்துடன், ராகு, கேது பாதிப்புகள் ஏற்படாது என்பது நம்பிக்கை. கயிறு கட்டும் முன் சனி தேவ மந்திரத்தை 21 முறை ஜபிக்க வேண்டும் என்பது விதி. வாழ்க்கையில் பொருளாதார பிரச்சனை உள்ளவர்கள் செவ்வாய்கிழமை சனி பகவானை வணங்கி காலில் கருப்பு கயிறு கட்டினால், பணப் பிரச்சனைகள் நீங்கி பணம் வரும் என்பது ஐதீகம். அவர்களுக்கு மட்டுமின்றி அவர்கள் வசிக்கும் வீட்டிலும் பணப் பற்றாக்குறை இருக்காது என்று கூறப்படுகிறது. கருப்பு கயிறு கட்டுவதற்கு முன், அதில் 9 முடிச்சுகள் போட வேண்டும். அதன் பிறகு அவர்கள் காலில் அணியலாம்.
குழந்தைகள் பிறந்து சில நாட்களிலேயே குழந்தைக்கும், தாய்க்கும் கருப்பு கயிறு கட்டப்படும். கயிறு குழந்தைகளுக்கு எந்த அசௌகரியத்தையும் ஏற்படுத்தாது. அதனால்தான் பெரியவர்களும் கயிறு கட்ட விரும்புகிறார்கள். இந்தக் கயிறு கட்டப்பட்ட கையிலோ, காலிலோ வேறு எந்த நிறக் கயிறும் கட்டக்கூடாது என்ற விதி உள்ளது. கறுப்புக் கயிற்றைக் கட்டிய பின் தினமும் ருத்ர காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும் அதனால் இந்தக் கயிறு அதிக சக்தி வாய்ந்ததாக மாறும் என்கிறார்கள் பண்டிதர்கள் கூறுகிறார்கள்.
மேலும், ஜோதிட சாஸ்திரப்படி கருப்பு கயிறு, கருப்பு நிறம்… தனுசு, துலாம், கும்பம், ராசி இவர்களுக்கு நல்லது. இந்த ராசிகளில் பிறந்தவர்கள் எந்த சந்தேகமும் இல்லாமல் கருப்பு நிற ஆடைகள் மற்றும் கருப்பு கயிறுகளை அணியலாம். விருச்சிகம் மற்றும் மேஷ ராசியில் பிறந்தவர்கள் கருப்பு நிறத்தை அணிய மாட்டார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி… செவ்வாய் இந்த இரண்டு ராசிகளையும் கட்டுப்படுத்துகிறது. எனவே, கருப்பு அவர்களுக்கு நல்லதல்ல. கருப்புக் கயிறு அணிந்தால்… மனதில் நிச்சயமற்ற நிலை ஏற்படும். உயிருக்கு ஆபத்து ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
நன்றி – கல்கி