பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு சுமார் 5 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது
டிட்வா புயலால் விளைநிலங்கள் சேதமடைந்த 67,460 நெல் விவசாயிகளுக்கு இழப்பீடாக 4,983 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக
விவசாகம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன அறிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“71,110 ஹெக்டேர் பரப்பளவில் மொத்தம் 148,464 நெல் விவசாயிகள் பயிர் சேதத்திற்கான கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.
இதில், கூடுதல் பயிர்களை பயிரிட்ட 10,801 விவசாயிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை பணம் வழங்கப்பட்டது.
பேரிடரால் பாதித்த பயிர்களுக்கு இழப்பீடாக 3,381.4 மில்லியன் ரூபா பணமாக வழங்கப்பட்டது.
“வரலாற்றில் முதன்முறையாக, ஒக்டோபர் முதல் ஜனவரி இறுதி வரை ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் அரிசி விலை உயர்வைத் தடுக்கும் வகையில் அரிசி மாஃபியா முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது.
அரிசியின் விலைகள் அதிகரிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது” என்றார்.





