பிரான்ஸில் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை தடைவிதிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல்!
பிரான்ஸின் தேசிய சட்டமன்றம் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய, எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை தடை செய்யும் மசோதாவிற்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பில் நேற்று (04.120 நள்ளிரவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 104 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
குறித்த மசோதாவானது செனட் சபையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டப் பின்னர் வரும் 2024 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஸ்போசபிள் இ-சிகரெட்டுகள் சிறிய, பேட்டரியால் இயங்கும் சாதனங்களாகும். அவை இனிப்பு சுவைகளுக்காக பதின்ம வயதினரிடையே குறிப்பாக பிரபலமாக உள்ளன. அவற்றில் புகையிலை இல்லை என்றாலும் போதைப்பொருளுக்கு நிகரான ஆபத்தான இரசாயணங்கள் உள்ளன.
(Visited 7 times, 1 visits today)