இலங்கைக்கான புதிய தூதுவர்கள் நியமனம்!
இலங்கைக்கான புதிய தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகர் ஆகியோர் இன்று (12.03) காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்.
தாய்லாந்து இராச்சியத்தின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள எச்.ஈ. பைடூன் மஹாபன்னபோர்ன் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஃபாஹிம் உல் அஜீஸ் ஆகியோர் கையளித்துள்ளனர்.
இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
(Visited 11 times, 1 visits today)





