மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து ; மூவர் பலி, மீட்பு பணிகள் தீவிரம்

அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் பலியான சம்பவம் மும்பை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பலர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடி வருவதாகவும் 25க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகிவிட்டதாகவும் கூறப்படும் நிலையில், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள விரார் கிழக்கில் ரமாபாய் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி புதன்கிழமை (ஆகஸ்ட் 27) திடீரென்று இடிந்து விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்த மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கியதாகவும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், 25க்கும் மேற்பட்டோர் மாயமாகிவிட்டதாகத் தெரிய வந்துள்ளது என்றும் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
மும்பையில் பிள்ளையாளர் சதுர்த்தி பண்டிகை ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும். நேற்று பிள்ளையார் சதுர்த்தி என்பதால் மும்பை மாநகரம் களைகட்டியிருந்தது.
இந்நிலையில், இந்த விபத்து குறித்த அறிந்த மும்பைவாசிகள் சோகத்தில் மூழ்கினர்.