அரிசி தட்டுப்பாட்டுக்கு அனுர அரசு காரணம் இல்லை
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாடு மற்றும் பிரச்சனைகளுக்கு எனது சகோதரர் உட்பட முன்னாள் ஆட்சியாளர்கள் வகை சொல்ல வேண்டும் என பிரபல அரிசி ஆலை உரிமையாளர் ட்டலி சிறிசேன தெரிவித்துள்ளார்
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் இந்த அரிசி விவகாரம் முன்னைய ஆட்சியாளர்களின் விவேகமற்ற செயற்பாடுகளால் உருவாக்கப்பட்டது.
இந்த நிலைமைக்கு எனது சகோதரர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் வகை சொல்ல வேண்டும்.
இவர்களே தற்போதைய அரிசி உற்பத்தி விலை அதிகரிப்பு மற்றும் நெருக்கடிகளுக்கு காரண கர்த்தாக்கள் ஆவர்.
கீரி அரிசி மற்றும் நாடு பச்சை அரிசி போன்றவை மாறி மாறி பயிர் செய்யப்படாமையும் இதற்கு இன்னொரு காரணமாகும்.
இவ்விடயம் குறித்து பல அரசாங்கங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. எவரும் எமது அறிவுரைகளை ஏற்கவில்லை.
தற்போது நாடு அரிசி தட்டுப்பாடே காணப்படுகிறது எனது அரிசி ஆலைகளில் இருந்து கீரி சம்பா அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது.
திட்டமிடப்படாத முறையற்ற செயல்பாடுகள் பிரச்சினையை தீவிரப்படுத்தி உள்ளன.
அரிசி தேவைக்கு இணங்க உரிய விகிதாசாரத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு உற்பத்தி இடம் பெறவில்லை. எதிர்காலத்திலும் திட்டமிட்ட செயற்பாடு இடப்பெறாவிட்டால் நாட்டரிசிப் பிரச்சினை திரும்பி மீண்டும் கீரி அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடும்.
ஆனால் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவோ அல்லது அவர் அரசாங்கமோ கரணம் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.