இலங்கையின் 9வது ஜனாதிபதியாக தெரிவானார் அநுரகுமார

2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.
அவர் இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்
சற்று முன்னர் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று முடிவுகளின்படி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலை வெற்றிக் கொள்வதற்கு போதுமான சதவீதம் கிடைக்கப்பெறவில்லை.
எனவே இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டன.
இதனடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை விட வாக்குகள் அதிகமாக பெற்று அநுர குமார திஸாநாயக வெற்றிபெற்றுள்ளார்.
(Visited 37 times, 1 visits today)