மர்ம நோய் பற்றிய சீனாவின் பதில்கள்
சீனாவில் குழந்தைகளிடையே பரவி வரும் மர்ம நிமோனியா குறித்த தகவல்களை உலக சுகாதார நிறுவனம் சீனாவிடம் கோரியிருந்தது.
இந்த நோய் குறித்து சீனா வழங்கிய தகவல்களில் ‘அசாதாரண அல்லது புதிய நோய்க்கிருமிகள்’ எதுவும் பதிவாகவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
அதன்படி, ஏற்கனவே இருந்த பல நோய்க்கிருமிகள் இந்த நோய் பரவுவதற்கு காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது, சுவாச நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறிந்து பராமரிப்பதில் சீனா அதிக கவனம் செலுத்தி வருகிறது.
மேலும், கோவிட் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் சீனாவில் காய்ச்சல் போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, தடுப்பூசி போடுதல், முகக்கவசம் அணிதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு சீன மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த உலக சுகாதார நிறுவனம், சீனாவின் நிலைமையை உன்னிப்பாக அவதானிப்பதாகவும், அந்நாட்டு தேசிய அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணுவதாகவும் தெரிவித்துள்ளது.