இலங்கை

இலங்கை மற்றுமொரு தாயும் மகளும் மாயம் – தீவிர விசாரணையில் பொலிஸார்

மஹரகம, பத்திரகொட, விஹாரவத்த வீதியில் வசிக்கும் தாயும் மகளும் காணாமல் போயுள்ளனர்.

இது தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

23 வயதுடைய இஷாதி ரங்கிகா என்ற தாயும் 3 வயதுடைய ஹிமாஷி எனற் பெண் குழந்தையும் 8 நாட்களாக காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.

19ஆம் திகதி காலை கிருலப்பனை பாமன்கடை பழக்கடைக்கு கணவர் வேலைக்குச் சென்றதாகவும், அன்று இரவு 10.00 மணியளவில் வீடு திரும்பியபோது மனைவியும் மகளும் வீட்டில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாய் மற்றும் மகள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 0112-850700 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு மஹரகம பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!