தொழில்நுட்பத்தில் மற்றுமொரு புரட்சி – இயந்திரக் கரங்களை உருவாக்கும் ஜப்பான்
ஐப்பானிய விஞ்ஞானிகள தொழில்நுட்பத்தில் மற்றுமொரு புரட்சிக்கு தயாராகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஒரே நேரத்தில் குவியும் வேலைகளை விரைந்து செய்துமுடிக்க இன்னொரு கை இருந்தால் நன்றாக என நினைத்து ஜப்பானிய விஞ்ஞானிகளின் புதிய நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
கூடுதல் இயந்திரக் கரங்கள் இருந்தால் பல வேலைகளை எளிதில் செய்துமுடிக்கலாம் என்பது இந்த குழுவினரின் நோக்கமாகும்.
Jizai என்ற ஜப்பானியக் கலையிலிருந்து உதித்தவை இந்தக் கரங்களாகும். பறவைகள், விலங்குகள், பூச்சிகள் போன்றவற்றின் வடிவத்தைத் தத்ரூபமாக உருவாக்குவதுதான் Jizai கலை. விரும்பியதைச் செய்யலாம் என்பதும் Jizai என்ற வார்த்தையின் அர்த்தம்.அதைத்தான் செய்கின்றன இந்தக் கைகள்.
டோக்கியோ பல்கலைக்கழகத்தில் மசாஹிகோ இனாமியின் (Masahiko Inami) குழு இயந்திரக் கைகளை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.
உடலுடன் பொருத்திக்கொள்ளக்கூடிய இந்தக் கரங்களின் எடை 14 கிலோ. ஜப்பானியர்களின் பாரம்பரிய பொம்மலாட்டம், யாசுனாரி காவாபாட்டா (Yasunari Kawabata) என்ற புகழ்பெற்ற ஜப்பானிய எழுத்தாளரின் திகில் கதை ஆகியவை கைகளை உருவாக்கத் தூண்டுதலாக அமைந்தன.
தேடல், மீட்புப் பணிகளில்கூட இவற்றைப் பயன்படுத்த முடியும் என்று இந்த விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.