வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து நபர் சுட்டுக் கொலை
வங்கதேசத்தின்(Bangladesh) மைமென்சிங்கில்(Mymensingh) உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணியில் இருந்தபோது இந்து தொழிலாளி பஜேந்திர பிஸ்வாஸ்(Bajendra Biswas) என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சக ஊழியர் நோமன் மியா(Noman Mia) கைது செய்யப்பட்டதாக ANI ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மெஹ்ராபாரி(Mehrabari) பகுதியில் உள்ள சுல்தானா(Sultana) ஆடைத் தொழிற்சாலையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு பிறகு அவர் உபசிலா(Upazila) சுகாதார வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் சிறுபான்மையினரை குறிவைப்பது அதிகரித்து வருவதாக வங்கதேசம் தெரிவித்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வார தொடக்கத்தில், அம்ரித் மொண்டல்(Amrit Mondal) என்ற நபர் மிரட்டி பணம் பறித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கொல்லப்பட்டார்.
அதற்கு முன்னதாக தொழிலாளி திப்பு சந்திர தாஸ்(Tipu Chandra Das) கொலை செய்யப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
வங்கதேசத்தில் இந்து நபர் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது





