இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தலைமையிலான அரசாங்கத்திற்கு மற்றுமொரு நெருக்கடி

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை, மற்றொரு கூட்டணி கட்சியும் விலக்கி கொண்டதால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது..
இதையடுத்து, பாராளுமன்றத்தில் நெதன்யாகு அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல், ஒரு பக்கம் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் நடத்தி வருகிறது.
ஈரான் உடனான போர் நிறுத்தப்பட்டாலும் பதற்றம் நீடிக்கிறது. இதுபோல், சிரியா, லெபனான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் நீடிக்கிறது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக, தீவிர பழமைவாத கட்சியான யுனைடெட் தோராஹ் ஜூடாயிசம் கட்சி அறிவித்தது.
இந்நிலையில், மற்றொரு தீவிர பழமைவாத கட்சியான ஷாஸ், அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாக நேற்று அறிவித்துள்ளது.
இருப்பினும் ஆட்சி கவிழ்வதை விரும்பவில்லை என்று, கூட்டணியில் இருந்து விலகியுள்ள இரண்டு கட்சிகளும் கூறியுள்ளன.