உக்ரைனில் 482 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
உக்ரைனில் குறைந்தது 482 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கான குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் 1,461 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளனர், அவர்களில் 979 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர் என்று அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
“உக்ரைன் பிரதேசத்தின் ஒரு பகுதியைத் தற்காலிகமாக ஆக்கிரமித்ததன் காரணமாக காயமடைந்த குழந்தைகளின் சரியான எண்ணி்க்கையை நிறுவுவது சாத்தியமில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தற்போது 18 வயதுக்குட்பட்ட 401 பேர் காணவில்லை என்றும், 12,561 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைனின் தேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.
(Visited 12 times, 1 visits today)





