முன்னோர்களின் பழக்க வழக்கங்களும், அறிவியல் உண்மைகளும்!
01. வெள்ளி, செவ்வாய் வீடு முழுக்கச் சாம்பிராணிப் புகை போடவேண்டும்.
பொதுவாக வீட்டில் உற்பத்தியாகும் பூச்சித்தொல்லை கொசுத் தொல்லை நீங்க நாம் செய்யும் இயற்கையான வழிமுறையே இது. சாம்பிராணி மணம் பல்வேறு விதமான பூச்சிகளையும் கொசுக்களையும் எதிர்க்கும் வல்லமை கொண்டது.
02. வாசலில் உள்ள நிலைப்படியில் மஞ்சள் தடவ வேண்டும்.
மஞ்சள் மிக நல்ல கிருமிநாசினி. வெளியில் வெவ்வேறு கிருமிகள் உள்ள இடங்களுக்குச் சென்று திரும்பும் நம் கால்கள் முதலில் மிதிப்பதுஇ நம் வாசல் நிலைப்படியைத்தான். அங்கு மஞ்சள் தடவப்பட்டிருந்தால் அது கிருமிகளை உள்ளே வரவிடாமல் தடுத்துஇ நோய்த் தொற்றுகளைத் தவிர்க்க வழிவகுக்கும்.
03. இடி இடிக்கும்போது, அர்ஜுனா…அர்ஜுனா என்று சத்தமாகச் சொல்லுங்கள்.
இடிச் சத்தம் பலமாக ஒலிக்கும்போது அது செவிப்பறையைத் தாக்கிக் கிழிக்கும் அபாயம் உண்டு. அர்ஜுனா என்று கத்தும்போது வாய் அகலமாகத் திறப்பதால் ஒலியானது இரண்டு பக்கமாகவும் சென்றுஇ செவிப்பறை கிழிவது காது அடைத்துக்கொள்வது போன்ற பிரச்னைகளிலிருந்து நம்மைக் காக்கிறது.
04. நகத்தைக் கடித்தால் தரித்திரம்.
நகத்தைக் கடிக்கும்போதுஇ நகத்தின் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் வயிற்றுக்குச் சென்று நோய்த்தொற்றை உருவாக்கும். நகத் துணுக்குகளை விழுங்கிஇ அதனால் உபாதைகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. அதனால்தான்இ நகம் கடிப்பதைத் தரித்திரம் என்றார்கள் பெரியோர்.
05. உச்சி வெயிலில் கிணற்றை எட்டிப் பார்க்கக் கூடாது.
உச்சிவெயில் படும் நேரங்களில் சூரியஒளி நேரடியாக கிணற்றில் விழுகிறது. இதனால் திடீரென வேதிவினை நடைபெற்று கிணற்றுக்குள் விஷவாயு உண்டாகலாம். அத்தருணம் கிணற்றில் எட்டிப் பார்ப்பதால் மயக்கம் உண்டாகவோ அதன் காரணமாக கிணற்றுக்குள் தவறி விழவோ வாய்ப்புண்டு.
06. வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது.
நம் புவியின் மையப்பகுதியில் இருக்கும் காந்தவிசையானது வடக்கு – தெற்காகத்தான் இயங்குகிறது. எனவே வடதிசையில் தலை வைத்துப் படுக்கும்போது காந்தவிசையால் நமது மூளையின் செயல்திறன் திறன் குறைய வாய்ப்புள்ளது.
07. கோயிலை விட உயரமாக வீடு கட்டக் கூடாது.
பலத்த இடி இடிக்கும் கோயில் கோபுரங்களின் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் கலசங்கள்இ அந்த மின் அதிர்ச்சியை உள்வாங்கி தரைக்குக் கடத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்தக் கோபுரத்துக்கோ சுற்றிலும் உள்ள வீடுகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது. எனவேதான் இன்றைய இடிதாங்கி அறிவியல் வசதி இல்லாத அக்காலத்தில் கோயிலை விட உயரமாகக் கட்டடம் கட்டவேண்டாம் என்று சொல்லி வைத்தார்கள் முன்னோர்கள்.
10. வீட்டு வாசலில் முருங்கை மரம் வைத்தால் வீட்டுக்கு ஆகாது.
மரங்களில் மிகவும் அடர்த்தியில்லாத மென்மையான கிளைகளைக் கொண்ட மரம் முருங்கை. அதனால்இ வீட்டில் இருக்கும் குழந்தைகள் விளையாட்டாக அதில் ஏறி விளையாடினால் கிளை முறிந்து குழந்தைகள் கீழே விழுந்து காயம் பட்டுக்கொள்ள வாய்ப்புண்டு. மேலும் கம்பளிப்பூச்சிகளின் புகலிடம் முருங்கை என்பதால்இ வீட்டுக்குள்ளும் கம்பளிப்பூச்சிகள் அதிகம் பரவும்.
நன்றி – விகடன்