தபால் ரயிலுடன் மோதி யானை ஒன்று உயிரிழப்பு…!
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த தபால் ரயிலுடன் இரண்டு யானைகள் மோதியதில் ஒரு யானை உயிரிழந்துள்ளது.இச்சம்பவம் (28) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கிதுல்உதுவ 154ம் கட்டைப் பகுதியில் யானை மின்வேலிகள் சிறந்த முறையில் இல்லாமையினால் யானைகள் அதிகளவில் விபத்துக்குள்ளாகி வருவதாகவும் அப்பகுதியிலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
வழமையாக குறித்த பகுதியில் ரயிலுடன் மோதி யானைகள் உயிரிழப்பதாகவும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும் குறித்த விடயத்தில் எது வித கவனமும் செலுத்துவது இல்லை எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இனிவரும் காலங்களிலாவது யானைகளை பாதுகாப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
(Visited 10 times, 1 visits today)





