இலங்கை

மீசாலையில் கடவையை கடக்கமுற்பட்ட போது ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் பலி!

யாழ். தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் புகையகரதத்துடன் மோதுண்டு வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டே உயிரிழப்பு ஏற்பட்டது.

மீசாலை புகையிரத நிலையத்துக்கு அருகில் இன்று சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் புகையிரத கடவையை அண்டியே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் புகையிரதக் கடவையை கடக்கமுற்பட்டபோதே விபத்து நேர்ந்துள்ளது.சம்பவத்தில் மீசாலை கிழக்கை சேர்ந்த 68 வயதுடைய செல்லையா பரமசாமி என்பவரே உயிரிழந்துள்ளார்.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்