அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தை 4 மணி நேரத்திற்கு மேல் தாமதப்படுத்திய Wi-Fi
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 4 மணி நேரத்திற்கு மேல் தாமதமாகப் புறப்பட்டுள்ளது.
பயணி ஒருவரின் இலவச இணையத் தொடர்பின் (Wi-Fi) hotspot பெயரில் ‘வெடிகுண்டு’ என்ற சொல் இருந்ததால் விமானம் தாமதமடைந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளத. பயணிகள் அனைவரும் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
விமானமும் பயணிகளின் பயணப்பெட்டிகளும் சோதிக்கப்பட்டன. பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட பின்னரே அவர்கள் மீண்டும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.
அமெரிக்க நேரப்படி பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்படவேண்டிய விமானம் மாலை சுமார் 6.15 மணிக்குத் தான் புறப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல்களை இயல்பானதாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.





