உலகம் சுற்றும் குழந்தை – 23 நாடுகளை சுற்றிவந்த 11 மாத குழந்தை
பிரிட்டனின் பெக்ஸ் லூயிஸ் மற்றும் வில் மாண்ட்கோமரியின் 11 மாத குழந்தை அட்லஸ் இளம் வயதில் பல நாடுகளுக்கு பயணம் செய்யும் உலகின் முதல் குழந்தையாக மாற உள்ளது.
பிரித்தானிய தம்பதியான பெக்ஸ் லூயிஸ் மற்றும் வில் மாண்ட்கோமெரி ஆகியோர் தங்களின் 6 வார குழந்தையை சுமந்து கொண்டு உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளனர்.
தற்போது 11 மாதங்களே ஆன குழந்தை இதுவரை இத்தாலி, சான் மரினோ, சுவிட்சர்லாந்து, லிச்சென்ஸ்டீன், ஸ்லோவேனியா, குரோஷியா, ஆஸ்திரியா, செக்கியா, டென்மார்க் மற்றும் நார்வே உள்ளிட்ட 23 நாடுகளுக்கு பயணித்துள்ளது.
அவர்கள் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து சென்றனர்.
மூவரும் இந்த நாடுகளுக்குச் செல்வது மட்டுமின்றி, அங்கு அதிக நேரம் செலவழித்து, அவர்களின் கலாச்சாரங்களைப் பார்த்து மகிழ்கின்றனர்.
பெக்ஸ் லூயிஸ் மற்றும் வில் மாண்ட்கோமெரி ஆகியோர் மொத்தம் 25 நாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
லூயிஸின் மகப்பேறு விடுப்பில் லூயிஸின் பெற்றோரின் வீட்டிலிருந்து தொடங்கி, தங்கள் 6 வார குழந்தையுடன் உலகம் முழுவதும் ஒரு பயணத்தைத் தொடங்குவதற்கு முன், இந்த ஜோடி பெரிய அளவிலான பணத்தைச் சேமித்து வருகிறது.
இந்த நோக்கத்திற்காக அவர்கள் சுமார் 14,000 டொலர்கள் மதிப்புள்ள ஒரு வேனை வாங்கினார்கள், அதில் அழகான குளியலறை, அலமாரிகள் மற்றும் இரவு உணவு மேசை உள்ளது.
பேபி அட்லஸின் குடும்பத்தினர் இந்த வேன் மூலம் ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளை சுற்றி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.