புத்தாண்டு தினத்தில் இடிந்து விழுந்த ஆம்ஸ்டர்டாம் (Amsterdam) தேவாலயம்!
நெதர்லாந்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆம்ஸ்டர்டாம் (Amsterdam) தேவாலயத்தில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்ட நிலையில் குறித்த ஆலயம் இடிந்து விழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு வெடித்ததில் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
கட்டிடம் முழுவதும் தீப்பிழம்புகள் வேகமாக பரவுவதையும், தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் பணியாற்றுவதையும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளிகள் காட்டுகின்றன.
இந்நிலையில் குறித்த தேவாலயத்தை சுற்றி வசித்து வந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
154 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தின் மேற்பகுதியின் சில பகுதிகள் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நீடித்த தீ பரவல் காரணமாக ஏற்கனவே இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீவிபத்து குறித்த விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
காணொளி
https://www.instagram.com/reel/DS8q3b3iNem/?utm_source=ig_web_copy_link





