அமெரிக்காவின் லூயிஸ்டன் நகர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் : தாக்குதல்தாரி தற்கொலை!

அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் உள்ள லூயிஸ்டன் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஏறக்குறைய 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர் அன்றைய தினம் தப்பிச் சென்றிருந்தார்.
இந்நிலையில் குறித்த சந்தேகநபர் நேற்று (27.10) உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 12 times, 1 visits today)