அமெரிக்காவின் மிக வேகமான ரயில் – 5 மணித்தியால பயணத்தை 40 நிமிடங்களில் செல்லலாம்
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலீஸ் முதல் லாஸ் வேகாஸ் வரையிலான மிக வேகமான ரயில் திட்டத்துக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2028 முதல் பயணிகள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதற்காக 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புளோரிடாவைச் சேர்ந்த பிரைட்லைன் வெஸ்ட் என்ற நிறுவனம் இத்திட்டத்தை நிறுவி செயல்படுத்தவுள்ளது.
லொஸ் வேகாஸ் முதல் லொஸ் ஏஞ்சலீஸ் வரை 350 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த அதிவேக ரயில் பயணிக்கவுள்ளது.
இந்த இடைப்பட்ட நகரங்களுக்கு இடையே பயணிக்க முன்பு 5 மணிநேரம் ஆன நிலையில், அதிவேக ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டால் 40 நிமிடங்களில் பயணிக்கலாம். 300 கிலோமீட்டர் வேகத்தில் இந்த ரயில் பயணிக்கும்.
போக்குவரத்துத் துறைக்காக 8.2 பில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை செயலாளர் பீடே புட்டிகிகே தெரிவித்துள்ளார்.
மியாமி முதல் ஓர்லாண்டோ வரை 200 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் ரயிலை பிரைட்லைன் வெஸ்ட் நிறுவனம் ஏற்கெனவே இயக்கி வருகிறது. ஒரு நாளுக்கு 16 முறை இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பாஸ்டன் முதல் வாஷிங்டன் வரை 241 கிலோமீட்டர் வேகத்தில் மற்றோரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.