ரஷ்யாவில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட அமெரிக்க பாடகர்

ரஷ்யாவில் போதைப்பொருள் விற்பனை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதையும் மீறி விற்றால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.
இந்தநிலையில் மைக்கேல் டிராவிஸ் என்ற அமெரிக்க பாடகர் ஒருவர் கொகைன் உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் மெபேட்ரோன் என்ற உயர்ரக போதைப்பொருளை விற்றது பொலிஸாருக்கு தெரிய வந்தது.
இதனையடுத்து போலிஸார் மைக்கேலை கைது செய்து அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இது தொடர்பான வழக்கு அந்த கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டு உறுதியாகும் பட்சத்தில் மைக்கேலுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
(Visited 12 times, 1 visits today)