செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் வன்முறைகளுக்கு இடமில்லை – ஜோ பைடன் அறிவிப்பு

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு போன்ற வன்முறைச் சம்பவங்களுக்கு இடமில்லை என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.

மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பென்சில்வேனியாவில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து எப்.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் விசாரித்து வருவதாகவும், அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் நோக்கம் குறித்து எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்காமல் மக்கள் அமைதி காக்குப்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

டிரம்ப்புடன் தொலைபேசியில் பேசியதாகவும், அவர் குணமடைந்து வருவதாகவும் பைடன் தெரிவித்தார். டிரம்ப்புக்கான பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இப்போதைக்கு, மக்கள் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதுதான் முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!