வட அமெரிக்கா

அமெரிக்கா – பிஸ்கெட்டில் விழுந்த வைர மோதிரம்… தேடும் பேக்கரி உரிமையாளர்

பிஸ்கெட்டில் விழுந்த வைர மோதிரத்தை தேடும் பேக்கரி உரிமையாளர்அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் மோன்ரா. அங்குள்ள நகரம் ஒன்றில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரது பேக்கரியில் இருந்து கேக், பிஸ்கெட், குக்கீஸ் ஆகியவை தயாரிக்கப்பட்டு சிறு கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறார்.

இந்நிலையில் பேக்கரியில் பிஸ்கெட்டுகளை தயாரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். அப்போது 4 ஆயிரம் டொலர் (இலங்கை மதிப்பில் ரூ.12 லட்சம்) மதிப்புள்ள வைர மோதிரத்தை தனது விரலில் அணிந்துள்ளார்.

மோன்ராவின் நிச்சயதார்த்தத்தின் போது அணிவிக்கப்பட்ட அந்த மோதிரத்தை அவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அணிந்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 5ம் திகதி பேக்கரிக்கு சென்று திரும்பிய போது தான் அவரது வைர கல் பதித்த அந்த மோதிரம் தொலைந்து போனதையும், அதை பிஸ்கெட் தயாரிக்க தேவையான பொருட்களை தயாரிக்கும் பெரிய குடுவைக்குள் போட்ட நியாபகம் வந்துள்ளது.

Baker Believes Lost $4K Diamond May Have Gotten Baked into a Cookie

இதனால் பிஸ்கெட் தயாரிக்கும் குடுவைக்குள் மோதிரக் கல் விழுந்திருக்கலாம் என கருதிய அவர், இதுபற்றிய விபரங்களை பேஸ்புக் தளத்தில் பகிர்ந்தார். அதில், 40 வருடங்களாக அணிந்திருந்த வைர மோதிரம் தொலைந்து போனதால் எனது இதயம் உடைந்துவிட்டது. அந்த மோதிரம் பிஸ்கெட் தயாரிக்கும் போது விழுந்திருக்கலாம் என்பதால், அந்த மோதிரத்தை கண்டறிந்து கொடுப்பவர்களுக்கு நான் நன்றிக்கடனாக இருப்பேன் என கூறி உள்ளார்.

வாடிக்கையாளர்கள் யாரும் பிஸ்கெட்டை கடித்து பற்களை உடைத்து கொள்ள வேண்டாம் என உஷார்படுத்தி உள்ள மோன்ரா, மோதிரத்தை கண்டுபிடித்தால் திருப்பித்தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

(Visited 21 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!