இலங்கை

நீதிபதியின் பதவி விலகலில் இலங்கை அரசாங்கத்தின் கோரமுகம் வெளிப்படுவதாக குற்றச்சாட்டு!

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலில் இலங்கை அரசாங்கத்தின் கோரமுகம் வெளிப்படுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா குருந்தூர் மலையில் கட்டப்பட்ட சட்டவிரோத பௌத்த விகாரை வழக்கின் கட்டளைகளை தொடர்ந்து கிடைக்கப்பெற்ற நெருக்கடிகள், உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் தொடர் அழுத்தங்கள் காரணமாக தனது பொறுப்புக்கள், பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவரால் இன்று (28) வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்,

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நீதிபதி சரவணராஜா அவர்களின் பதவி விலகலில் இலங்கை அரசாங்கத்தின் கோரமுகம் வெளிப்படுகின்றது. நீதிபதிக்கே இந் நிலமை என்றால் சாதாரண தமிழ் மக்கள் எவ்வளவு கொடூரமான அரசின் கீழ் , கொடூரமான அரசாங்கத்தை நடாத்திக்கொண்டிருக்கும் இனவாதிகளின் கீழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த விடயத்திலே நீதியின்பால் அவருக்கு கொடுக்கப்பட்ட மன அழுத்தங்கள் , உயிர் அச்சுறுத்தல்கள் ஊடகங்கள் மூலம் வெளிவந்திருக்கின்றது. இப்படியான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் கவனத்தில் எடுத்து தமிழ் மக்களுக்கு இப்படியான நெருக்கடிகள் இலங்கையிலே ஏற்படுகின்றது என்பதை உணர்ந்து மக்களுக்கான தீர்வு திட்டங்களையோ அல்லது மக்கள் சுதந்திரமாக வாழ கூடிய நிலமையையோ ஏற்படுத்தி தரவேண்டும் என தெரிவித்தார்.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!