தென்னாப்பிரிக்காவுக்கு அனைத்து நிதி உதவிகளும் நிறுத்தப்படும் – டிரம்ப் அதிரடி

தென்னாப்பிரிக்காவுக்கு அனைத்து நிதி உதவிகளும் நிறுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு வழங்கும் அனைத்து நிதியுதவிகளையும் நிறுத்தப்போவதாக தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் நில சீர்திருத்தக் கொள்கை தவறாகக் கடைப்பிடிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட வகுப்பினரின் நிலத்தைப் பறித்து அவர்களை அரசு மோசமாக நடத்துவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ள வெள்ளை இனத்தைச் சேர்ந்த விவசாயிகளை மீள்குடியேற்றம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.
(Visited 28 times, 1 visits today)